வரதன்
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலய 400 வது ஆண்டு பெரு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒரே நாளில் அதிகப்படியான சிறார்களுக்கு இடம் பெற்ற ஞானஸ்தான நிகழ்வு
இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட நவ நாள் திருப்பலி ஆலயத்தின் 400 வது ஆண்டு ஸ்தாபக தின விசேட திருப்பலி நிகழ்வும் தொடர்ந்து ஞானஸ்தானம் பெரும் சிறுவர்களுக்கான திருவிழா திருப்பலியும் இங்கு ஒப்புக் கொடுக்க ப்பட்டது ஆலயத்தின் 400 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் ஒரே நாளில் அதிகப்படியான சிறார்களுக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் மறை மாவட்ட ஆயறினால் ஞானஸ்தான நிகழ்வு இன்று இங்கு வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்ச மாகும் இன்றைய இந்த நிகழ்விற்கு ஆலயத்தின் ஒன்பது வட்டாரங்க ளிலும் உள்ள 400 சிறுவர்கள் உட்பட அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டமை இன்றைய திருவிழாவின் விசேட அம்சமாகும்.