இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

 


வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.4 வீத அதிகரிப்பு என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தனது X கணக்கில் குறிப்பொன்றையிட்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 437.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

இதேவேளை, பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.

இதன்படி இந்த ஆண்டு இதுவரை 268,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 42,768 ஆகும்.

மேலும், ரஷ்யாவில் இருந்து 39,914 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,278 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 18,016 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.