703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


 

 நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 178 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 703 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 
204 கிராம் ஹெராயின்,
118 கிராம் ஐஸ்,
03 கிலோ 100 கிராம் கஞ்சா,
2,840 கஞ்சா செடிகள்,
03 கிலோ 190 கிராம் மாவா, 
 77 கிராம் மதன மோதகம்,
477 போதை மாத்திரைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 525 சந்தேக நபர்களில் 01 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில்   போதைக்கு அடிமையான 6 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 04 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 178 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 11 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பெற்ற 156  பேரும் உள்ளனர்.