(கல்லடி செய்தியாளர்)
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் மட்டக்களப்பு மண்முனை- வடக்குப் பிரதேச செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்பட்டது.
மண்முனை- வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர்களான மு.ற.சியாகுல்ஹக் மற்றும் லெட்சணியா பிரசாந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி ச.பிரணவசோதி மற்றும் திருமதி ஜீ.கணேசமூர்த்தி, நிர்வாக உத்தியோகத்தர் ரி.சந்திரமோகன், நிர்வாக கிராம உத்தியோகத்தர் ரி.ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தேசியக் கொடியை ஏற்ற, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுதந்திரத்திக்காக உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களால் பயனுள்ள மரக் கன்றுகள் பிரதேச செயலக வளாகத்தில் நடப்பட்டன.