76 ஆவது சுதந்திர தின விழாவை இன்று காலி முகத்திடலில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
'புதிய நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாண்டு சுதந்திர தின கொண்டாட்ட பிரதம விருந்தினராக தாய்லாந்து பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.
இம்முறை சுதந்திர தின விழாவை பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரிக்கவுள்ளன. முப்படைகளின் அணிவகுப்புகளும் கோலாகலமாக இடம்பெறவுள்ளன.
மரியாதை அணிவகுப்பிப்பில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 3 ஆயிரத்து 461 பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.