கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.