மட்டக்களப்பில் முன்னணி தன்னார்வ
தொண்டர் நிறுவனமான லிப்ட் நிறுவனத்தின் அனுசரணையில் அம்மா வீடு சிறுவர் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது . நகர்ப்புற பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்தல் எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் சம்பிரதாய பூர்வமாக இன்று காலை திறந்து வைத்தார்.
லிப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் வேலை திட்டத்திற்கு மனித நேயம் நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதிகளான சிரஞ்சீவி மற்றும் அவரது பாரியார் சாந்தி ஆகியோர் கௌரவ அதிதிகளாக வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
மேலும் சுவாமி விபுலானந்த கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி திருமதி பாரதி கென்னடி, வைத்தியர் பேராசிரியர் அருளானந்தம் மற்றும் சிலரும் அதிதிகளாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது . .