"ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றுதான் என்னால் கூற முடியும்,"- முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

 


ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய குடியரசு முன்னணி நேற்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே திருமதி குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அண்மையில் ஜனாதிபதி அலுவலகம் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.

"ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்றுதான் என்னால் கூற முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.