இலங்கையில் இதய நோயாளர்களின் எண்ணிக்கைஅதிகரித்து செல்வதாக சொல்லப்படுகிறது .

 


இலங்கையில் பிராந்திய ரீதியாக பதிவாகும் இதய நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகளே இதற்குக் காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலியில் வைத்திய நிலையமொன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.