72 சுகாதார தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பை இன்றைய தினமும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு ஏற்படாததை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35 ஆயிரம் ரூபா போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் நேற்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.
இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்