நாடளாவிய ரீதியில் உள்ள லொத்தர் விற்பனை முகவர்கள் இன்று (06) முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலகவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லொத்தர் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு கொமிசன்கள் வழங்கப்படாமை மற்றும் சலுகைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.