மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு

 


மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக  குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு இம்மாதம் 4 ஆம்  திகதி சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

மலையகத்தின் இலை மறை காயாக இருந்து தென்னிந்திய தொலைக்காட்சியில் சரி கம பா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இசைத்துறையில் உள்ள திறமைகளை வெளிகாட்டி மலையக மண்ணுக்கு கௌரவத்தை தேடி கொடுத்த மலையக குயில் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளை மலையக மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது. 

அமைப்பின் தலைவர் ராமன் செந்தூரன் தலைமையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.