மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின்
நடப்பாண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதேச
ஒருங்கிணைப்புக்குழு
தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தனபாசுந்தரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில், துறைசார் திணைக்களங்களின் உயரதிகாரிகள்
பங்குபற்றினர்.
கடந்த ஆண்டு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பரிவில் சுமார் 139 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில்
ஆராயப்பட்டதோடு,
இவ் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
பிரதேச அபிவிருத்திக்கூட்டங்கள் நடைபெறும்போது திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேசத்தில் உள்ள மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கூட்டத்திற்கும் வருகை தர வேண்டும் என்பதற்காக எந்த அதிகாரிகளும் வரமுடியாது என, இராஜாங்க அமைச்சர்
அதிகாரிகளைச் சாடினார்.
மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் திர்மானம் ஒன்றை எடுத்து
அதன் ஊடாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களை இணைத்து கலந்துரையாடவுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.