கவிஞர் ராஜாத்தியின் "அவளில்லா இரவுகள்"




கவிதை நூல் வெளியீடு!

அமரர் வெ.தவராஜா (கவிஞர் ராஜாத்தி) அவர்களின் 31ஆம் நாள்  நினைவாக அவரது நினைவுகளைத்  தாங்கி படைப்புலகம் தொடர்பான பல படைப்பாளிகளின் கட்டுரைகளுடன் மட்டக்களப்பு நொச்சிமுனையிலுள்ள அவரது இல்லத்தில் வெளியிடப்பட்ட தவராஜாவின் சுவடுகள் நூலுடன் இணைந்தவகையில் அவரால் வெளியிடப்படவிருந்த அவரது ஐந்தாவது நூலும் இரண்டாவது கவிதை நூலுமான'அவளில்லாஇரவுகள' ( பிரிதலும் அதனைப் புரிதலும் இன்னும் சிலவும்) சுவடுகளுடன் இணைந்தவகையில் கடந்த செவ்வாய்க்கிழமை (06) வெளியிடப்பட்டது.

முன்னுக்கு நினைவு மலரும் பின்னுக்கு கவிதை நூலுமாக வித்தியாசமான வடிவில் மகுடம் வி.மைக்கல் கொலினின் அணிந்துரையுடன் இக் கவிதை  நூல் படி கலாசார வட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.