ஜவ்பர்கான் கான்- மட்டக்களப்பு
மிக நீண்ட காலமாக புனரமைப்பின்றி காணப்பட்ட மட்டக்களப்பு கிரான் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட தேவபுரம் விளையாட்டு மைதானம் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அம்மானினால் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
முன்னாள் பிரதி அமைச்சரின் இணைப்பாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் அமைப்பாளருமான நந்தகுமார் பிரதீப் தலைமையில் குறித்த மைதானம் திறப்பு விழா இடம் பெற்றது. பிரதேச முக்கியஸ்தர்கள் அரசு அதிகாரிகள் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்
இவ் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவின் போது விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இங்கு உரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போதைய ஜனாதிபதியின் காலத்தில் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த நிலையில் விளையாட்டு துறையை ஊக்குவிப்பது நமது கடமையாகும். ஆகவே இவ்வாறான மைதானங்களை புனரமைப்பதனூடாக இந்த மாவட்டத்தில் விளையாட்டு துறையை கட்டி எழுப்ப முடியுமென எதிர்பார்க்கிறேன் ” என தெரிவித்துள்ளார் .