வாகன சாரதிகளின் சுயதொழில் கூட்டுறவு அவபிவிருத்தி சங்கத்தினரால் ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைப்பு .

 

 







 மட்டக்களப்பு மாவட்ட வாகன சாரதிகள் சுயதொழில் கூட்டுறவு அவபிவிருத்தி சங்கம். தமது  சாரதிகளின் நலனை கருதில் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இது உருவாக்கப்பட்டு இரண்டு  வருடங்கள் பூர்த்தியாகும் இந்த வேளையில் இவ்வருடம் அவர்களின்  சங்கத்திற்குள் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களின் ஒரு பகுதி நன்கொடையாளர்களின் உதவியுடன் வழங்கப்பட்டது.

வருடாவருடம் இவ்வாறான கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் திட்டம்  இருப்பதாக சங்கத்தினர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.