உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில், சங்க உறுப்பினர்களது பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல், ஆசிய கிண்ண ஓசை பந்து கிரிக்கெட்டில் பங்கேற்கவுள்ள வீரர்களை பாராட்டி வழியனுப்பி வைக்கும் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
சங்கத்தின் தலைவர் டிசாந்தன் தலைமையில் இந் நிகழ்வுகளில், உதயம்
விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு உதவிகளை வழங்கி சேவைகளை செய்து இடமாற்றம்
பெற்று செல்லும் சமூக சேவை உத்தியோகத்தரும் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி தனபலசிங்கம் கலந்துகொண்டார்.
டுபாய் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண ஓசை பந்து கிரிக்கெட்
போட்டியில் பங்குபற்றவுள்ள விழிப்புலனற்ற வீரர்களான மோகன்ராஜ் மற்றும்
யோகராஜா ஆகிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
அன்பு
கரங்கள் மற்றும் உலகச் சிறுவர் நலன் காப்போம் அமைப்புக்களின் நிதி
அனுசரணையில் கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள், சங்க உறுப்பினர்களது
பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
கிழக்கு பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் யோகராஜா, மட்டக்களப்பு
வலயக் உதவி கல்விப் பணிப்பாளர் ஹரிஹரராஜ் ,மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்
அருள்
மொழி, மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர் ஷிராணி ,மண்முனை மேற்கு
சமூக சேவை உத்தியோகத்தர் ராஜ்மோகன், உலகச் சிறுவர் நலன் காப்போம் அமைப்பின்
பொறுப்பாளர் சூசை தாசன், தரிசனம் விழிப்புலனற்றோர் ஸ்தாபகர் மற்றும்
நிர்வாக தலைவர் இதயராஜா,உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகர் விநாயக
மூர்த்தி
மற்றும் உதயம் விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்