அம்பாறையில் குரங்குகளின் தொல்லையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விவசாய
நிலங்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்களை சேதப்படுத்துவதும்,
விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களை உண்டு வீணாக்குவதாகவும்
குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது தவிர போக்குவரத்து செய்யும் மக்களும் பல இடர்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதே வேளை குரங்குகளின் அட்டகாசத்தால் பல பகுதிகளில் உள்ளவர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிகரித்து
வருகின்ற குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.