மட்டக்களப்பு வவுணதீவில் பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு!!







            
மட்டக்களப்பு மண்முனை மேற்கு  வவுணதீவு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கொத்தியாபுலை மாதர் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களின் பாடசாலை செல்கின்ற  பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு (28) திகதி பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்களின் ஆலோசனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் 98 மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி கலந்து கொண்டு மாணவர்களுக்கான அப்பியாசக்கொப்பிகளை வழங்கி வைத்துள்ளார்.