புதிய தேசம் அமைப்போம் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

 

 








வரதன்


நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று  நிரூபத்துக்கேற்ப  இன்று தேசிய ரீதியில் சகல மாவட்ட செயலக அலுவலகத்தில் புதிய தேசம் அமைப்போம் இன்னும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு   திறாய்மடுவில்  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்றது
எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு இந்த மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு   மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.