நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும்- மைத்திரிபால சிறிசேன

 


 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான ஆயத்தம் இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட “சுதந்திரத்துக்கான அபி” என்ற மாநாட்டில் கலந்து கொண்ட போதே மைத்திரிபால சிறிசேன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.