ஊடகவியலாளர்களை வலுவூட்டும் வகையிலான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

 


 

ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனையுடன் பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வு செய்வதற்காக ஊடகவியலாளர்களை வலுவூட்டும்
வகையிலான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.


கிழக்கு மாகாணத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்குத் தெளிவூட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஐ.ஓ.எம்
நிறுவனத்தால் செயலமர்வு நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியொன்றில் ஐ.ஓ.எம் நிறுவனத்தின் சிரேஸ்;ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இம்தாத் பாஸார் இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்து
நடாத்தினார்.
ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐ.ஓ.எம் நிறுவனம் வடக்கு கிழக்கு மாகாணங்களை
மையப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுத்த வருகின்றது.
இதெனொரு அங்கமாகவே, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தெளிவூட்டப்பட்டனர்.

இந்த பயிற்சியின்போது ஆட்கடத்தில்கள்,மனித விற்பனைகள் நடைபெறும் வழிமுறைகள்,அதனால் பாதிக்கப்படுவோருக்கு வழங்கவேண்டிய உதவி நடைமுறைகள்,
அது தொடர்பான சட்ட நடைமுறைகள்,பாதுகாப்பான புலம்பெயர்வினை உறுதிப்படுத்தல் உடபட பல்வேறு விடயங்களில்
பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இறுதியாக பயிற்சியில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.