உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மகிழடித்தீவு பிரதேச
வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வு
நடைபவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மகிழடித்தீவு
பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டுளக்சி கிருஸ்ணமூர்த்தி
தலைமையில் இடம் பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில்,
பட்டிப்பளை பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்தியர் ரமேஸ் தலைமையிலான ஊழியர்களும்
கலந்து கொண்டனர்.
மகிழடித்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து, கொக்கட்டிச்சோலை பிரதான வீதி வழியாக நடைபவனி
இடம்பெற்றது.
ஒலி பெருக்கி ஊடாக விழிப்புணர்வு தகவல்கள் பரிமாறப்பட்டதோடு, பேரணியில் கலந்துகொண்டவர்கள் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
நடைபவனி, மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்தை சென்றடைந்து அங்கு பொதுமக்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கும்
இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.