மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணப்படும் இரால் பண்ணையினை தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு குத்தகை அடிப்படையில் உரிமம் வழங்கும் விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு இடையிலாக ஒரு சங்கத்தினை கட்டி எழுப்ப வேண்டும் எனவும், இங்கு வழங்கப்படுகின்ற நிலத்தினை பயன்படுத்தி இரால் உற்பத்தினை செய்வதற்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது தொடர்பாகவும், வழங்கப்படுகின்ற நிலங்களை பெற்றுக்கொண்டு இரால் உற்பத்தியை செய்யாமல் இருக்கக் கூடாது எனவும் உரிய முறையில் ரால் உற்பத்தினை மேற்கொண்டு பலன்களை அடைய வேண்டும் எனவும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்பார்க்கின்ற வாரம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணிகளை வழங்கும் விதமாக அந்த காணிகளை பகிர்ந்து அளிப்பதற்கும் நில அளவை திணைக்களுத்தினால் அளவீடுகள் செய்து உரிய முறையில் பகிர்ந்து அளிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் சி.சுதாகர், கிழக்கு மாகாண மீன்பிடிக் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சுதாகர், உதவி காணி ஆணையாளர் ஜனாப் K.L.M.முஸம்மில், நெக்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.