சைக்கிள் ஓட்ட வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக மாபெரும் சைக்கிள் ஓட்ட போட்டி!

 







நிரோஷன்

பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழாவை சிறப்பிக்கும் முகமாக (11) காலை 9 மணி அளவில் பிரம்மாண்டமாக  நடத்தப்பட்ட சைக்கிள் ஓட்ட போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து   பல வீரர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பில் இருந்து வாழைச்சேனை ஊடாக மீண்டும்  மட்டு நகர்  வரை மொத்தமாக 90 கிலோமீட்டர் தூரம் சென்று  அன்னையின் தேவாலயத்துக்கு முன்னால்  நிறைவடைந்தது.

இச்சுற்றுப் போட்டியில் மாமாங்கத்தைச் சேர்ந்த ப.பிரசாத் முதலாம் இடத்தையும்
கூலாவடியை  சேர்ந்த லெனெஸ்டன் றாகல்  இரண்டாவது இடத்தையும் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம். எஸ் எம். சலீம் அவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் சைக்கிள் ஓட்ட வீரர்களைக் கௌரவிக்கும்  வகையில்  குறுகிய சைக்கிள் ஓட்டப் போட்டியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பொலீஸ்மாஅதிபர் உதித் லியனகே  மற்றும் டி.எம்.வி.பி கட்சியின் இளைஞரணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.