இலங்கையை சிங்கப்பூருக்கு அப்பால் வளர்ந்த நாடாக மாற்றக்கூடிய ஒரே இராஜதந்திரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே- அமைச்சர் மனுஷ நாணயக்கார

 


ஒரு குழுவினர் இந்த நாட்டு மக்களை மீண்டும் சோகத்தில் தள்ள நினைத்தாலும், இலங்கையை சிங்கப்பூருக்கு அப்பால் வளர்ந்த நாடாக மாற்றக்கூடிய ஒரே இராஜதந்திரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறான தடைகள் வந்தாலும் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக வெற்றியீட்டுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 அநுராதபுரம் இளைஞர் விடுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.