கரந்தெனிய குருதுகஹத்தபம் திவிதுரகமவில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட கரந்தெனிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் திலீப ரொஷான் குமாரவின் கொலையாளிகளை அடையாளம் காண ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொலைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய, தனது அலுவலகத்தின் முழுக் கண்காணிப்பின் கீழ், தனி சிறப்புப் பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் கூறுகிறது.