நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என  கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற பிரேரணைக்கு அனைத்து உள்ளுராட்சி பிரதிநிதிகளும் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.