கெஹலிய ரம்புக்வெல்ல இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுப்பு .

 


முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அவர் பங்கேற்க மறுத்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பாராளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பிக்கும் நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு சபாநாயகர் சிறைச்சாலை திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.