மட்டக்களப்பில் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் துரித கதியில்!

































(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பில் சுதந்திர தினத்தைக் கொண்டாட ஏற்பாடுகள் துரித கதியில் இடம்பெற்று வருவதைக் காண முடிகிறது.

இந்த வகையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு மற்றும் கல்லடி பழைய பாலத்தை அண்டிய பகுதிகள் தேசியக் கொடியாலும் வர்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மற்றும் நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் அண்மித்த பகுதிகள் , தனியார் வர்த்தக நிறுவனங்கள் , வணக்க ஸ்தலங்கள் என  எங்கும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன    இவ் வருடம் சுதந்திர தின கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட  பட உள்ளது

இம்முறை கிழக்கு மாகாண சுதந்திரதின விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (04) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.