ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி.

 

 


 

சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும் அதன் பின்னரான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

அதன்படி, உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்காக, இந்த  சத்திர சிகிச்சைக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 லட்சம் ரூபா வழங்கப்படுகிறது.