பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

 


அம்பாறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் ஏறக்குறைய 30 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த ஐந்து பாடசாலை மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை உதேனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.