(கல்லடி செய்தியாளர்)
மகுடம் பதிப்பகத்தின் 78 ஆவது வெளியீடான
பிரபல ஊடகவியலாளரும், சிறுகதைப் படைப்பாளியுமான
சண் தவராஜாவின் (சுவிஸ்)
'கொரோனாவுடன் வாழுதல்' (கட்டுரை நூல்) வெளியீட்டு விழா!
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் பெளர்ணமி கலை இலக்கிய தொடரின் 51 ஆவது நிகழ்வாக மகுடம் பதிப்பக வெளியீடான சண் தவராஜாவின் 'கொரோனாவுடன் வாழுதல்' கட்டுரை நூலின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்,
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் பிரதம விருந்தினராவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் ச. நவநீதன், கோறளைப்பற்று தெற்கு (கிரான்)
பிரதேச செயலாளர் க. சித்திரவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது வரவேற்புரையை பிரபல ஊடகவியலாளர் இ.தேவஅதிரனும், நூல் வெளியீட்டுரையினை மகுடம் பதிப்பக இயக்குனர் மகுடம் வி. மைக்கல் கொலினும் ஆற்றவுள்ளனர்.
நூலின் முதல் பிரதியை மட்டக்களப்பு வர்த்தகர் சங்க தலைவர் தேசபந்து
மா. செல்வராஜா பெற்றுக்கொள்ள, நூல் தொடர்பான அறிமுகத்தை கிழக்குப் பல்கலைக்கழக ஆரம்ப செளக்கிய பீடத் தலைவர் வைத்திய கலாநிதி கே. அருளானந்தம் வழங்கவுள்ளார்.
இந் நிகழ்வை கதிரவன் த. இன்பராசா தொகுத்து வழங்க, கவிதாயினி சுதாகரி மணிவண்ணன் நன்றியுரை ஆற்றவுள்ளார்.