கலைஞானச்சுடர் ஸ்ரீமதி‌ சுபாஷினி அவர்களின் நான்காவது கவிதைதொகுப்பான " வங்கூழ் " நூல் வெளியீடு .

 













 



























 சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்

 தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநரும் கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியரும் கலைஞரும் கவிஞருமான கலைஞானச்சுடர் ஸ்ரீமதி‌ சுபாஷினி அவர்களின் நான்காவது கவிதை தொகுப்பான " வங்கூழ் " எனும் நூல் 09.02.2024 வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

பிரித்தானிய சைவ முன்னேற்றச்சங்கம் அறங்காவலர், திரு ரபீந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் திரு அரவிந்த குமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். திரு முன்னிலையாக சிவாகம கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு அவர்களும் மகிமை விருந்தினராக  டாக்டர்  காப்பியக்கோ ஜின்னா சரிபுதீன்  அவர்களும்,
சிறப்பு அதிதிகளாக   கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி  அதிபர் திருமதி யோகராணி சிவபாலன் அவர்களும்   மற்றும் பிரித்தானிய தேசத்திலிருந்து வருகைதரும் சைவமுன்னேற்றச்சங்க   
ஸ்தாபகர் மதிப்பார்ந்த வ இ.இராமநாதன்  ,  திரு. இ. லோகநாதன், சங்கத்தலைவர் திரு நிரஞ்சன்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மதிப்பார்ந்த. வைத்திய கலாநிதி. சோ. பதந்தன் அவர்கள்.
அவசர சத்திரசிகிச்சைப்பிரிவு, கொழும்பு தேசிய வைத்தியசாலை.
மதிப்பார்ந்த. திரு.செந்தில்நாதன் அவர்கள்.   பிரதம நிறைவேற்ற அதிகாரி, வீரகேசரி பத்திரிகை.   மதிப்பார்ந்த. திரு. S. செந்தில்வேலவர் அவர்கள்.
பிரதம ஆசிரியர், தினகரன் பத்திரிகை.மதிப்பார்ந்த திரு.ஆர்.சிவராஜா அவர்கள்
பிரதம ஆசிரியர் தமிழன் பத்திரிகை ஆகியோருடன் முன்னிலை பிரதிநிதிகளை திரு. ராமநாதன், திரு. பஞ்சாட்சரம், திருமதி சந்திரவதி குகதாசன், திரு. வித்ய நாத் குகநாதன்,  ஆகியோர் பெற்று சிறப்புச்செய்தனர்.
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்த்குமார் அவர்கள் கவிஞர் கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்களின் கவிதைகளை வியந்து பாராட்டியதுடன் இவ்வாண்மையை மாணவர்களிடமும் எடுத்துச்செல்ல வேண்டும் என கூறியிருந்தார். கல்லூரி முதல்வர் திருமதி யோகராணி சிவபாலன் அவர்கள் ஆசிரியரின் பண்புகளையும் அர்ப்பணிப்பினையும் திறன்களையும் பாராட்டி இவர்கள் போன்ற ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என கருத்துக்கள் பகிர்ந்து கொண்டார்.
காப்பியக்கோ அகமது ஜின்னாஹ் சரிபுத்தீன் அவர்கள் கவிஞரின் பன்முகத் திறன், கவிதையாக்கம், கவிதையின் ஆழம் நிறைந்த கருத்துக்கள், நயம் என்பவற்றினை வியந்த பாராட்டினார்.
அனைத்து வகையான உயர்வுடன் சிறப்புடன் கவிஞர் ஸ்ரீமதி சுபாஷினி அவர்களின் நான்காவது கவிதை நூலான வங்கூழ் நூல் வெளியீட்டு விழா அமைந்திருந்தது.