ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான ஒமர் அல்-ஃபயேத் என்பவரையே கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
காசாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் காவல்துறை மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.