விவேகா பழைய மாணவர் சங்கம் மற்றும் சிவாநந்த தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கங்களிற்கு இடையேயான நல்லிணக்க சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது .

.















 மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்  முகாமையாளர்  சுவாமி  நீலமாதவானந்தா ஜீ  மஹராஜ் தலைமையில்  இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளான சிவாநந்த வித்தியாலயம் மற்றும் விவேகானந்த மகளிர் கல்லூரிகள் இரண்டினதும் பழைய மாணவர் சங்கங்கள் இன்று ஒன்றாக சந்தித்து    தங்களது    எதிர்கால செயல்பாடுகள் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் எதிர்காலத்தில்  பாடசாலைகளை மேலும் எவ்வாறு வலுப்படுத்தி செல்லலாம் என ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு  வந்திருந்தார்கள்     அதேபோன்று இருபாடசாலைகளும் போட்டி பாடசாலைகள்  அல்ல எனபதும் இரு பாடசாலைகளும் சகோதர பாடசாலைகள் என்பதை புரிந்து எதிர்காலத்தில் ஒவ்வொரு செயல்பாடுகளையும் வடிவமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.


இன்றைய கலந்துரையாடலில் விவேகானந்தா மகளிர் பாடசாலை அதிபர், பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும்  சிவாநந்த  பாடசாலையின் சார்பில் அதிபர், பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும், சிவாநந்த பட்டமுன் மாணவர்கள் சங்க செயலாளர், பொருளலாளரும்   கலந்துகொண்டிருந்தனர்.

இவ் கலந்துரையாடலானது இன்றைய நாளில் ஆரம்பகட்ட கலந்துரையாடலே இது தொடர்ச்சியான முறையில் இடம்பெறும் என்பதையும் தெரிவிக்கப்பட்டிருந்தது

அதே வேளை இது தொடர்ப்பான  நினைவாக இரு அதிபர்களும் மற்றும்  சிவாநந்த பழைய மாணவர் சங்க தலைவர் , விவேகானந்த பழைய மாணவர் சங்க செயலாளர் ஆகியோரால் மர கன்றுகளும் 🌳🌱 நடப்பட்டது.