இந்த ஆண்டு நீர்க் கட்டணத்தை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த நீர்க் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நீர் சூத்திரதிலுள்ள விடயங்கள் குறித்து மேலும் ஆராய்ந்து வருகிறோம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நீர் சூத்திரம் மூலம் மக்கள் மீது மேலும் தேவையற்ற சுமையை திணிக்கவோ அதனை அமுல்படுத்தவோ தற்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 2024 என்பது கொள்கைகளை உருவாக்கும் ஆண்டாகும். 2025 என்பது கொள்கை அமுலாக்கும் ஆண்டாகும். இருப்பினும், நீர்க் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவது அவசியமாகும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.