(பழுவூரான்)
மட்டக்களப்பில் இரண்டாவது மொழி சிங்களப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 41 உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று வெள்ளிக்கிழமை (02) ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறி தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக 150 மணித்தியாலங்கள் நடத்தப்பட்டது.
தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய காத்தான்குடி ஆசிரியர் மத்திய நிலைய இணைப்பாளர் ஏ.எல்.எம்.றிஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் பயிற்சிக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் பஸ்மிலா ரவிராஜ் பிரதம அதிதியாகவும், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் இணைப்பாளர் கல்யாணி தங்கராஜ், நிறுவகப் பயிற்றுவிப்பாளர் ய.கல்யாணி மற்றும் ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சர்வேஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது பயிற்சியாளர்களின் பாடல், பேச்சுக்கள் சிங்கள மொழியில் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.