இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் அங்கீகாரம்

 


இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர், இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும்.