மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை எரிபொருள் சந்தையில் காலடி வைத்துள்ளது.

 


 

இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் காலடி வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்" நிறுவனமே இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், அந்த நிறுவனத்துக்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கடந்த 22ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக "யுனைடெட் பெட்ரோலியம் லங்கா லிமிட்டெட்" என்ற நிறுவனத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.