பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஇன்று (9) அயோத்தி ராமர் கோவிலுக்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லிக்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.