2009 இறுதி யுத்தம் வரையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் மருத்துவப் பணியின் காரணமாக ஓய்வு பெற்ற ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அவர்களில் 55வது பிறந்த நாள் வரை அவர்களைச் சார்ந்தவர்களுக்கு குறித்த கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.