பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!



















மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் பெருவிழா இன்று மறைமாவட்ட ஆயர் அதிவந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இடம் பெற்றதுடன், கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான திருவிழா இனிதே நிறைவு பெற்றது.

அன்னையின் சுற்றுப் பிரகாரம் நேற்று (10) திகதி ஆலயத்தில் இருந்து வழமையான வீதிகள் ஊடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்திருந்தது.

ஆயர் தலைமையில் இடம் பெற்ற பெரு விழாவில் இயேசு சபை துறவிகளான அருட்தந்தை சகாயநாதன், அருட்தந்தை ஏ.யேசுதாசன் அடிகளார் மற்றும் அருட்தந்தை விரைட்டன் அவுஸ்கோன் உள்ளிட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது நிலையினர் பங்கு மக்கள் மற்றும் அயல் பங்கு மக்கள் என பெருமளவிலானோர் பெருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசிரை பெற்றுக் கொண்டனர்.

இன்றைய தினம் ஆயரினால் சிறுவர்களுக்கு உறுதிப் பூசுதல் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.