சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது.
மாற்றுத்திறனாளிகள்
சம்மேளனத்தின் தலைவர் ஏ.அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம
விருந்தினராக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய,
ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
மாற்றுத் திறனாளிகள் அதிதிகளுடன் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வில்
விசேட தேவையுடைய மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள்
அரங்கேற்றப்பட்டதுடன், கல்வியில் சாதனை படைத்த மூன்று
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட சமூக
சேவை உத்தியோகத்தர் திருமதி.ச.கோணேஸ்வரன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்
எஸ்.அருள்மொழி, சிரேஸ்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், ஹமிட்
அமைப்பின் பணிப்பாளர், டாரா நிறுவனத்தின் பணிப்பாளர், மாற்று திறனாளிகள்
அமைப்பின் ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.