மட்டக்களப்பு. கல்லடியில் "Noisy E7" இசைக்குழுவின் கன்னி இசை நிகழ்வு!

 






















 


(கல்லடி செய்தியாளர்)

 கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள "The Liya cafe" க்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணிக்கு  முதன் முதலாக தனது கன்னி இசைநிகழ்வினை அரங்கேற்றியது.

அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் மனம் நொந்து போயுள்ள மக்களை இசையால் மகிழ்விக்கும் நோக்குடன் இவ் இசை நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இந்நிகழ்வைக் காண கல்லடி, நொச்சிமுனை, நாவற்குடா மற்றும் மட்டக்களப்பு நகர் மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.

 இந்நிகழ்வின் அனுசரணையாளர்களாக The Liya cafe (event partner) ,  Thabes sound (sound partner) , Studio JK (Photographic partner) ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.

இவ்விசைக்குழுவானது தொடர்ந்து திருமண நிகழ்வுகள், ஏனைய வைபவங்களிலும்,  Ticket shows மற்றும் Promotion show களையும் நிகழ்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இக்குழுவின் தலைவர் டிறோசன் மரியதாஸ் "Batti media" வுக்குத் தெரிவித்தார்.