ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

 


இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ  ஜே.வி.பி தலைமையகத்தில் NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மனித உரிமைகளை நிலைநாட்டுதல், ஜனநாயகம், தேர்தல் ஒத்திவைப்பு மற்றும் சமீபத்தில் இயற்றப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் லார்ஸ் பிரெடல் மற்றும் NPP பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.