விபத்துக்களை தடுக்கும் முகமாக மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பிரதேசத்தில் ஆறு வளைவுகளில் வீதி தடைமேடு (Speed breaker) அமைக்கப்பட்டது .







களுவாஞ்சிக்குடி செய்தியாளர்


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பிரதேசத்தில் அதிகளவான வளைவுகளுடன் பிரதான வீதி காணப்படுகின்றது. இதனால் கடந்த வருடங்களில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது  நீண்ட காலமாக அமைக்கப்படாமல் இருந்த வீதி தடைமேடு (Speed breaker) தற்போது   அமைக்கப்பட்டுள்ளது.
 அண்மையில்  26 வயதான இளைஞன் உயிரிழந்ததை தொடர்ந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் குருக்கள் மடம் கிராமத்தில் பிரதான வீதியில் சுமார் ஆறு வளைவுகளில் வீதி தடைமேடானது அண்மையில் அமைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குறிப்பாக குருக்கள்மடம் கிராமத்தில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அமைக்கப்படாமல் இருந்த இந்த வீதி தடை மேடு அமைக்கப்பட்டமை பல விபத்துக்களை  தடுப்பதற்கு உதவியாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .