ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார்.

 


காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாணங்களை பெற்றுக்கொடுப்பதற்காக (Children of Gaza Fund) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளார்.

காஸா குழந்தைகள் நிதியத்துக்கு இதுவரை 57 இலட்சத்து 73 ஆயிரத்து 512 ரூபா நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த நிதி விரைவில் காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட உள்ளது.