மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று இடம் பெறவுள்ளது.

 







 

தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் எதிரிவரும் வெள்ளிக்கிழமை 08.03.2024 அன்று வெகுசிறப்பாக இடம் பெறவுள்ளது.

அந்த வகையில் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய ‘பாலறு பால புஸ்கரணி’ தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் நள்ளிரவு வரை இடம் பெறும்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் இடம் பெறும்.மாலை 6 மணி தொடக்கம் அதிகாலை வரை பஜனை, சங்கீதக்கச்சரி, நடனம், கதாப்பிரசங்கம், சமய பேருரைகள் என்பன இடம் பெறும். மேலும் அன்றயை தினம் ஆலயத்தில் ருத்திர வேள்வியும் இடம் பெறகாத்து இருக்கின்றமையும் சிறப்பம்சம்மாகும்