கதிரவன் பட்டிமன்றப் பேரவை பேச்சாளர்களுக்கான பாராட்டு நிகழ்வும் மாணவர்களின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு போதும்-போதாது 133 ஆவது செயலூக்கப் பட்டிமன்றமும்.













 





















































சஜித்நாத்

இந்தியா-தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில்  
சிறப்புப் பட்டிமன்றங்கள் நிகழ்த்திய  
கதிரவன் பட்டிமன்றப் பேரவை பேச்சாளர்களுக்கான  பாராட்டு நிகழ்வு  மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்.மிகவும் சிறப்பாக இடம் பெற்றது

மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய  அதிபர் திரு அ.குலேந்திரராசா
 தலைமையில் இடம் பெற்ற .விழாவில்  மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பிரதம  அதிதியாக கலந்து கொண்டார் , அத்தோடு  சிறப்பு விருந்தினர்களாக ஊர் பிரமுகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பலர் பங்குபற்றினர்.

 மாணவர்களின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு போதும்-போதாது   என்ற தலைப்பில் 133 ஆவது செயலூக்கப்   பட்டிமன்றமும்  கதிரவன் பட்டிமன்றப் பேரவையினால் மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயதில் நடாத்தப்பட்டது


கதிரவன் பட்டிமன்றப் பேரவை பேச்சாளர்கள்  அனைவருக்கும்  அதிதிகளாலும்  மற்றும் சிறப்பு விருந்தினர்களாலும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன